புலிகளுக்காக கடத்தவிருந்த ரசாயன பவுடர் மண்டபத்தில் பறிமுதல்
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரசாயன பவுடர், ஆசிட், உள்ளிட்ட பெருமளவிலான வெடிபொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை மண்டபத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் அருகில் உள்ள வேதாளை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக பெருமளவிலான வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினர் அங்கு விரைந்தனர். அறுப்புக்காடு என்ற இடத்தில் கடற்கரையில் சோதனையிட்டபோது மண்ணில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாலிதீன் மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவற்றை வெளியே எடுத்துப் பார்த்தபோது அதில், 90 பிளாஸ்டிக் கேன்களில் (தலா 5 லிட்டர் கொள்ளளவு) ரெக்ஸின் என்கிற ரசாயன திரவம், 20 கேன்களில் (தலா 20 லிட்டர் கொள்ளளவு) ஆசிட் ஆகியவை இருந்தன. இதுதவிர 500 கல் உப்பு பாக்கெட்டுகள், ரசாயனப் பவுடர் ஆகியவையும் இருந்தன.
இதில் ரெக்ஸின் என்பது, படகுகளில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கப் பயன்படுத்தப்படுவது. தண்ணீர் படகுக்குள் புகாமல் இருக்கவும் இவற்றை பூசுவார்கள்.
ரசாயன பவுடர் வெடிபொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருளாக கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டு அவர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications