For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடி-மின்னல்: டிவி வெடித்து சிறுமி பலி

By Staff
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: டிவி வெடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு சொக்கநல்லூர் காலனியில் வசிப்பவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவரது மகள் சித்ரா (11).

சித்ரா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிவி வெடித்து சிதறியது.

இதில் டிவி அருகே அமர்ந்திருந்த சித்ரா உடல் சிதறி பலியானாள்.

வெடித்த கலர் டிவி அரசு வழங்கிய இலவச கலர் டிவி என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X