கருணாநிதி-அன்பழகன் நட்பின் ரகசியம் 'வீராசாமி'!
சென்னை: தானும் பேராசிரியர் அன்பழகனும் இவ்வளவு காலம் ஒற்றுமையோடு இருப்பதற்கு ஆற்காடு வீராசாமி தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி சீனிவாசன் மகன் அசோக்குமார்-பத்மாவதி திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:
ஆற்காடு வீராசாமியை பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். தொண்டுள்ளமும், தியாக மனப்பான்மையும் உழைக்கும் திறமையும் கொண்டவர். இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக நினைக்கும் நெஞ்சம் கொண்டவர்.
இந்த இயக்கத்தில் என்.வி.என். மறைவுக்கு பிறகு யார் என்று நினைத்த நேரத்தில் கிடைத்த புதையல் தான் ஆற்காடு வீராசாமி. எறும்பின் சுறு சுறுப்போடு, தேனீயின் அக்கரையோடு இயக்கத்தை கட்டிக் காக்கும் தளகர்த்தர்.
வடஆற்காடு மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் அறியும் வகையில் அவர் கீர்த்தி பெற்று விளங்க அவரது உழைப்பும், தியாகமும், தான் முதலீடு.
அவரது திருமணம் நடந்தபோது தந்தையார் எதிர்ப்பால் தனக்கு ஷாக் அடித்ததாக கூறினார். அதை வைத்தே புரிந்து கொண்டேன். வருங்காலத்தில் அவர் மின் துறை அமைச்சர் ஆவதற்குத் தான் என்று. அவரது வாழ்க்கையில் பொதுப்பணி பாதையில் அவருக்கு ஏராளமான ஷாக் அடித்து இருக்கிறது. அதற் கெல்லாம் ஈடு கொடுத்து வீர நடை போட்டு இயக்கத்தை சுட்டி காக்கும் தளகர்த்தர்களில் அவர் ஒருவர்.
வீராசாமி யார் மனமும் கோணாமல் நடந்து கொள்பவர். இந்த சுபாவமும், பன்பும் இயக்கத்தில் ஒவ்வொரு வருக்கும் வரவேண்டும்.
நானும், பேராசிரியர் அன்பழகனும் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதை, இன்று அரசியல் வட்டாரத்தில் அதிசயமாக பார்க்கிறார்கள். சம காலத்தில் வாழும் இரு தலைவர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பதை பார்க்க இயலாது.
எங்கள் இருவரது நட்பையும், அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளையும் ஒட்டி பிணைத்துக் கொண்டிருப்பவர் வீராசாமி தான் என்றார் கருணாநிதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications