மெட்ரிகுலேசன் தேர்வுகள்-நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளித் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
மெட்ரிகுலேஷன் தவிர ஓஎஸ்எல்சி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வை 58,424 மாணவர்களும், 47,623 மாணவிகளும் எழுதுகின்றனர். சென்ற ஆண்டை விட இது 4,329 கூடுதலாகும்.
ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வினை 1,852 மாணவர்களும், 2,743 மாணவிகளும் எழுதுகின்றனர். ஓஎஸ்எல்சி தேர்வினை 1,500 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
27ம் தேதி முதல் எஸ்எஸ்எல்சி தேர்வுகள்:
எஸ்எஸ்எல்சி தேர்வுகள் 27ம் தேதி துவங்குகின்றன. ஏப்ரல் 10ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும்.












Click it and Unblock the Notifications