வேலைவாய்ப்பு அலுவலக்கத்தில் குவிந்த ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள்
வேலூர்: வேலூரில் ஆசிரியர் பயிற்சியை முடித்த பட்டதாரிகள், ததங்ளது பட்டப்படிப்பை பதிவு செய்தவற்காக குவிந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விடிய விடிய கொட்டிய மழையில் குடையுடன் அவர்கள் காத்திருந்தனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழ் வாங்கிய கையோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக முண்டியடுத்துக் கொண்டு செல்வது ஆண்டு தோறும் வாடிக்கையாகி விட்டது.
இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தங்களது பயிற்சி பள்ளிகளில் சான்றிதழ் பெற்றனர். இன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தீர்மானித்து நேற்று மாலையே சான்றிதழ் வாங்கிய கையோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.
பதிவு மூப்பு பெறுவதற்காக அவர்கள் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடித்து நின்றது பரிதாபமாக இருந்தது. இரவு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாப்பிடக் கூட போகாமல் திரண்டிருந்தனர்.
இதைப்பார்த்த வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள், நாளை (இன்று) எவ்வளவு பேர் வந்தாலும் பதிவு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டுக்கு சென்று விட்டு காலையில் வாருங்கள் என்று கூறினர்.
இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்தவர்களும் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்போரும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் அருகிலேயே விடிய விடிய காத்திருந்தனர்.
கோடை மழை பரவலாக பெய்து வருவதால் அவர்கள் பாதுகாப்புக்காக கையில் குடையுடன் வந்திருந்தனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு படுத்தவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications