துபாயில் உலகின் மிகப் பெரிய நீர்த்தேக்கம்
துபாய்: உலகிலேயே மிகப் பெரிய நீர்த் தேக்கம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது.
உலகின் மிகப் பெரிய கட்டுமானப் பணிகள் பல துபாயில் நடந்து ஏற்கனவே சாதனைகளைக் குவித்து வரும் நிலையில் இன்னொரு சாதனையும் துபாயின் பெருமைப் பட்டியலில் சேருகிறது.
உலகிலேயே மிகப் பெரிய கான்க்ரீட் நீர்த் தேக்கம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 168.6 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த நீர்த்தேக்கம், மொத்தம் 3 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 6 கோடி காலன் கொள்ளளவு கொண்டதாகும்.
இது அமெரிக்காவின் சான்டியோகாவில் உள்ள எர்ல் தாமஸ் நீர்த்தேக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இங்கு தற்போது 3.5 கோடி காலன் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதுதான் உலக சாதனையாக உள்ளது. அதை துபாய் நீர்த்தேக்கம் முறியடிக்கவுள்ளது.
துபாயின் முஷ்ரிப் என்ற இடத்தில் இந்த நீர்த்தேக்கங்கள் அமையவுள்ளன. மொத்தம் 16.5 ஹெக்டேர் பரப்பளவில் இவை கட்டப்படவுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த மம்முத் குழுமமும், ஜெர்மனியின் மேக்ஸ் போகல் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
15 மாதங்களில் இதுதொடர்பான கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications