இந்தியர்களுக்குப் புதிய பணி ஒப்பந்தம்-மலேசிய அமைச்சர்

கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் பணி நிலை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக மலேசிய அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துக் கொண்டுள்ளது. அது முடியும் தருவாயில் உள்ளது.
மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தங்கள் குறித்து மலேசிய அரசுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன். இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தப்படும். மலேசியாவில் பணியாற்ற வருவோருக்கு நியாயமான, நேர்மையான பணிச் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டியது மலேசிய அரசின் கடமை. அதிலிருந்து நாங்கள் நழுவ மாட்டோம் என்றார் அவர்.
மலேசியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகம். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர்.
இந்த நிலையில், முறையான விசா இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்ததாக கூறி 7 இந்தியர்கள் உள்பட 128 வெளிநாட்டினரை மலேசிய போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களில் மியான்மரைச் சேர்ந்தவர்கள் 65 பேர் ஆவர். அனைவருமே முறையான விசா இல்லாமலும், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications