ஓகேனக்கல்: கருணாநிதி மெளனம் ஏன்?- ஜெ கேள்வி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், கர்நாடகம் எல்லையானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தமிழக பகுதிகள் அப்போதைய சேலம் மாவட்டப் பகுதியிலும் கர்நாடக பகுதிகள் அப்போதைய மைசூர் மாவட்ட பகுதியிலும் வரையறுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா தற்போது உரிமை கொண்டாடும் பகுதிகள் அனைத்தும் பிரிட்டிஷ் வனத்துறை நில அளவையின்படி பார்த்தாலும் சரி, பயன்பாட்டின்படி பார்த்தாலும் சரி தமிழக எல்லையில் தான் உள்ளன.
இரு மாநில எல்லைகளுக்கு இடையில் நில அளவை செய்வது என்றாலும் மத்திய நீர் நில அளவை நிர்வாகம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்ட வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மீண்டும் நில அளவை செய்யமுடியும்.
எனவே மீண்டும் நில அளவை செய்தாலும் கர்நாடக மாநிலம் உரிமை கோரும் அனைத்து பகுதிகளும் தமிழகத்திலேயே இருக்கின்றன. தமிழகத்திற்கு இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பேசாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
தேசிய உணர்வு இல்லாத கன்னட அமைப்புகள் தான் இதுபோன்ற குறுகிய மனப்பான்மையுடன் தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றால் தேசியக் கட்சிகளும் (பாஜக என்று டைரக்டராக சொல்லாமல் தவிர்ப்பது ஏனோ.. கூட்டணி தடுக்கிறதோ) இந்த விஷயத்தில் உண்மை நிலையை எடுத்துரைக்காமல் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
ஓகேனக்கல்லில் உள்ள பகுதிகள் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னட அமைப்பினருக்கும், கர்நாடக அரசியல் கட்சிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருக்கும் திமுக அரசை கண்டித்தும்,
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்களின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10மணி அளவில் ஓகேனக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்பாட்டம் கழக அமைப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications