லிங்கத்தின் மீது சூர்ய ஒளி-களக்காடு கோயிலில் உற்சாகம்
களக்காடு: களக்காடு கோயிலில் சூர்ய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வைபவம் நேற்று நடந்தது. ஆண்டுக்கு 2 முறையே இந்த அதிசயம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் மழைக்கு இடையிலும் இந்த வைபவம் நேற்று நடந்ததால் பக்தர்கள் பெரும் பரவசமடைந்தனர்.
களக்காட்டில் கிபி 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்மாள் கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும், தலா 3 நாட்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூர்ய ஒளி நேரடியாக விழுவது வழக்கம்.
இந்தாண்டு மார்ச் 20,21,22 ஆகிய தேதிகளில் சூர்ய ஒளி சிவலிங்கம் மீது விழும் என்று கணிக்கப்பட்டது. அதற்காக கடந்த 20ம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆனால் அதிகாலையில் இருந்து மழை பெய்ததால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூர்ய ஒளி விழுவது தடைப்பட்டது. தொடர்ந்து ஒருவாரமாக மழை பெய்ததால் வழக்கமாக விழும் 22ம் தேதி வரை சூரிய ஒளி விழவில்லை.
இந்நிலையில் சூர்ய ஒளி விழும் அதிசயம் நேற்று காலை 6 மணிக்கு நடந்தது. முதலில் கொடிமர மண்டபத்தில் விழுந்து கொலு மண்டபம், மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
அப்போது சிவலிங்கம் பொன் நிறத்தில் தகதகவென காட்சியளித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நடந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications