சென்னையில் ரூ.100 கோடியில் மாநில நூலகம்
சென்னை: சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
தற்கால அறிவியல் நூல்கள், நவீன வெளியீடுகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட பனுவல்கள் மற்றும் மேற்கொள் தொகுப்புகள் போன்றவை சாதாரண மக்களுக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில், சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
நவீன மாநில நூலகம் கட்ட சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலம் பள்ளிக் கல்வித் துறைக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. நூலகம் கட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் கட்டடக் கலை வல்லுநர்களிடமிருந்து வரைப்படங்கள் சமர்ப்பிக்க விருப்பம் தெரிவிக்கக் கோரி விளம்பரம் செய்யப்பட்டது.
பொதுப் பணித் துறை, தலைமைப் பொறியாளரை (கட்டிடம்) தலைவராகக் கொண்ட மதிப்பாய்வுக் குழு, மாதிரி வடிவமைப்புகளை மதிப்பீடு செய்து கட்டட வடிவமைப்பாளரான சி.ஆர். நாராயண ராவ் நிறுவனத்தை தேர்வு செய்தது.
இந்நிறுவனத்துடன் பொதுப் பணித்துறை விரிவான கட்டட வடிவமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
சி.என். நாராயணராவ் நிறுவனம் சார்பாக சி.என்.ராகவேந்திரன் மற்றும் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் த.அன்பழகன் ஆகியோர் கையெத்திட்டனர்.
மே 2008க்குள் கட்டட ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடவும் அதனைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுளுக்குள் கட்டடம் கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications