பெய்ஜிங் ஒலிம்பிக்: இதுவரை 22 வீரர், வீராங்கனைகள் தகுதி!
பாட்டியாலா:பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள இதுவரை 22 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜா ரந்தீர் சிங் கூறுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 22 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தடகளப் பிரிவில் மஞ்ஜித் கெளர் (400மீ), வில்வித்தையில் மங்கல் சிங், டோலா பானர்ஜி, குத்துச்சண்டையில் ஏ.எல்.லக்ரா (57கிலோ), அகில் குமார் (54 கிலோ), திணேஷ் குமார் (81கிலோ), ஜித்தேந்தர் (51 கிலோ), விஜேந்தர் (75 கிலோ) தகுதி பெற்றுள்ளனர்.
துப்பாக்கிச் சுடும் பிரிவில் மனவ்ஜித் சிங் சந்து, அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், சஞ்சீவ் ராஜ்புத், சம்ரேஷ் ஜங், மான்ஷேர் சிங், அஞ்சலி பகவத், அவனீர் கெளர் சித்து ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
நீச்சல் பிரிவில் விரத்வால் காடே 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவிலும், அங்குர் போசேரியா 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவிலும் பங்கேற்பார்கள்.
டேபிள் டென்னிஸில் அசந்தா சரத்கமல், நேகா அகர்வால் ஆகியோரும், மல்யுத்தத்தில் 66 கிலோ பிரிவில் சுசில் குமாரும் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.
--


Click it and Unblock the Notifications
