பீகார் கொடுமை-பெண்ணை மரத்தில் கட்டி அடி-உதை, சித்ரவதை
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் திருடனை பைக்கில் கட்டி இழுத்துச் சென்றனர் காவல் துறையினர். தற்போது அங்கு மீண்டும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
நாபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் மந்திரவாதியான லால்பரி தேவி. இவர் சூனியம் மூலம் வைத்தியம் செய்பவராம். அடல்சாக் டுமாரியா என்ற கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனோரமா ராய் என்ற பெண்ணுக்கு மந்திரம் போட நேற்று சென்றார்.
அப்போது மனோரமாவின் உடல் நிலை மோசமானது. இதனால் ஆத்திரமடைந்த மனோரமாவின் கணவர் ராம் அயோத்தியா ராய் லால்பரி தேவியை கடுமையாகத் தாக்கினார்.
அவரை ரோட்டில் இழுத்துச் சென்று மரத்தில் கட்டினார்.
அவருடன் ஊர் மக்களும் சேர்ந்து கொண்டு லால்பரியை தாக்கினர். அவரது முகம் மற்றும் தலையில் சுண்ணாம்பு பூசி கொடுமைப்படுத்தினர். வலி தாங்க முடியாமல் லால்பரி கதறித் துடித்தார்.
ஆனால் விடாமல் அவர் அடித்து உதைக்கப்பட்டார். முகம், வாய் உடைந்து ரத்தம் கொட்டிய நிலையிலும் தாக்குதல் நிற்கவில்லை.
ரொம்ப லேட்டாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வநத்போது லால்பரியின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவரை ஒரு வழியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து ராம் அயோத்தியா ராயை கைது செய்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி













Click it and Unblock the Notifications