கைதி கணேசன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
வேலூர்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கணேசன், நேற்று புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கற்பழிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணேசன், தனது மனைவி நதியாவை சிறை துணை ஜெயிலர் உள்ளிட்டோர் கற்பழித்து விட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நதியாவுக்கு திருமணமே ஆகவில்லை என்றும், அவர் கன்னி கழியாதவர் என்றும் போலீஸ் மற்றும் நதியாவின் தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கணேசன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை சித்திரவதை செய்து வருகின்றனர் என்றும் கூறி அவரது வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க வேலூர் மாவட்ட நீதிபதிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வேலூர் நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கணேசன் சித்திரவதை செய்யப்படுவது உண்மை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கணேசனை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை, தரமான உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று வேலூர் சிறையிலிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு கைதி கணேசன் மாற்றப்பட்டார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications