வரி ஏய்ப்பு: முருகன் இட்லிகடைகளில் அதிரடி ரெய்டு

சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முருகன் இட்லி கடைக்கு தமிழ்நாடு முழுவதும் 15 கிளைகள் உள்ளன. இந்த கடைகளில் இட்லிதான் பிரதாமான மெனுவே. இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் விற்பனை விவரங்களை முறைப்படி கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்ைத கணக்கிலேயே காட்டாமல் முருகன் இட்லிக் கடை நிர்வாகம் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முருகன் இட்லிக் கடைக்கு வருமான வரித்துறை குறி வைத்தது. அதன் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு மூன்று நகரங்களிலும் உள்ள கடைகளை வருமான வரித்துறையின் 8 குழுக்கள் முற்றுகையிட்டன. 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள 8 கிளைகள், மதுரையில் 4 மற்றும் திருச்சியில் உள்ள 3 கிளைகளில் இந்த சோதனை நடந்தது.
மேலும் முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன் மற்றும் பிற நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications