அரியலூர் அருகே ஏட்டு மனைவி கொடூரக் கொலை
அரியலூர்: அரியலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவி கொடூரமாக கொல்லப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் கீழபாலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பரமசிவம். இவரது மனைவி மைதிலி (35). நேற்று முன்தினம் இரவு பரமசிவம் பணிக்குச் சென்று விட்டார். வீட்டில் மைதிலி தனது குழந்தைகள் காவ்யா மற்றும் வினோத்துடன் தனியாக இருந்தார்.
நேற்று காலையில் காவ்யா தூங்கி எழுந்தபோது மைதிலி கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து அலறினார்.
உடனடியாக போலீஸாருக்கும், பரமசிவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மைதிலியின் உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் இரும்புக் கம்பியால் மைதிலியை அடித்து, பின்னர் வயரால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
மைதிலியை கொள்ளையர்கள் கொன்றார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications