குவைத்தில் மரண தண்டனையிலிருந்து தப்பிய இந்தியர்!
கோழிக்கோடு: குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர், மத்திய அரசின் தலையீட்டால், மரண தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகவுள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் ஜமுனா தாபா. இவர் கடந்த 2005ம் ஆண்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த கேரள மாநிலம் எலத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளகத் என்பவரை குவைத் போலீஸார் கைது செய்து அவர் மீது ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விசாரணையில் செளகத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தாபாவின் குடும்பத்தினர் தங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடாக செளகத் கொடுத்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது.
இதுகுறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், தாபாவின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் இழப்பீடு கொடுத்தால் செளகத்தை மன்னிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து செளகத் ரூ. 20 லட்சம் பணத்தை கோர்ட்டில் கட்டினால் அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.
இதையடுத்து மத்திய அரசு இந்தப் பணத்தை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி மத்திய அரசு ரூ. 10லட்சம் பணத்தைக் கொடுக்கும். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இருவர் தலா ரூ. 5 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணம் ஜமுனா தாபாவின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். எனவே விரைவில் செளகத் விடுதலை ஆவார் என்றார் ரவி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications