இந்தியர்களுக்கு விசா: யுகே புதிய நடைமுறை அமல்
மும்பை: உயர்நிலை தொழில் திறன் படைத்தவர்களுக்கான 'டயர்- ஒன்' விசா திட்டத்தை முதன்முறையாக இந்தியர்களிடம் இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டு குடியுரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு விசா விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அடுக்கு விசா முறையை இங்கிலாந்து வெளியுறவுத்துறை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி இந்தியாவுக்கான இங்கிலாந்து ஹைகமிஷனர் சர் ரிச்சர்டு ஸ்டாக் கூறுகையில்,"
டயர் 1- பாயிண்ட் அடிப்படையில் சாப்ட்வேர் போன்ற உயர் தொழில்திறன் நிபுணர்களுக்கானது. படித்துக் கொண்டே வேலையும் பார்க்க அனுமதி உண்டு.
டயர் 2 - அனுபவம் வாய்ந்த தொழில் நிபுணர்களின் வேலைவாய்ப்புக்கானது.
டயர் 3 - இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியர்களால் நிரப்பமுடியாதபட்சத்தில் கீழ்மட்ட வேலைகளுக்கான குடியேற்ற அனுமதிக்கானது.
டயர் 4 - மாணவர்களுக்கானது.
டயர் 5 - தற்காலிக தொழிலாளர்களுக்கானது.
ஆகிய 5 வகையான விசா நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் வகையான டயர் 1 பாயிண்ட் அடிப்படையிலானது. முதன்முறையாக இந்தியர்களுக்காக ஏப்ரல் 1 முதல் ஓராண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, முந்தைய வருவாய், வயது, இங்கிலாந்தில் முன்அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பாயிண்டுகள் நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட பாயிண்ட் அடிப்படையில் விசா வழங்கப்படும். இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம். எனவே இந்த டயர் 1 விசா நடைமுறைமூலம் இந்தியர்கள் அதிகம்பேருக்கு இங்கிலாந்து விசா கிடைக்கும் வாய்ப்புள்ளது.
டயர் 2 மற்றும் 5 2008 செப்டம்பர்வாக்கிலும், டயர் 4 அடுத்தாண்டிலும் அமல்படுத்தப்படும்.
டயர் 3 தேவைப்படும் போது வழங்கப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications