பிரதமர் அழைப்பு - கர்நாடக ஆளுநர் டெல்லி விரைகிறார்
பெங்களூர்:கர்நாடக கலவரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை உடனடியாக டெல்லி வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துள்ளார். இதையடுத்து தாக்கூர் டெல்லி விரைகிறார்.
ஓகனேக்கர் கர்நாடகத்திற்குச் சொந்தம், அங்கு குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கூறி கன்னட அமைப்புகள் வன்முறையில் குதித்துள்ளன.
தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத் தாக்கி வருகின்றனர். தமிழ் டிவி சானல்களை இருட்டடிப்பு செய்துள்ளனர். தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். 10ம் தேதி பந்த் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் கலவரம் மூளலாம் என்ற அச்சம் கர்நாடகத் தமிழர்களிடையே, குறிப்பாக பெங்களூர், மைசூர் தமிழர்களிடையே நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், மத்திய அரசு தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காக்க முன்வர வேண்டும் எனவும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டுள்ளார். கர்நாடக வன்முறை குறித்து கேட்டறிய, மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை டெல்லிக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை தாகூர் டெல்லி விரைகிறார். தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரதமரிடம் தாக்கூர் விவரிக்கவுள்ளார்.
தற்போதைய வன்முறையைத் தடுக்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கும்பலாக நின்று வேடிக்கை பார்ப்பதாக தமிழர்களும், தமிழ்ச் சங்கமும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று எல்லையில் கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே தமிழக, கர்நாடக எல்லையில் இன்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கன்னட ரக்சன வேதிகே அறிவித்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இரு மாநில போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
--
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications