பிரபாகரன் படத்திற்குத் தடை கோரி திருமா. வழக்கு
சென்னை: பிரபாகரன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் சிங்களத்தில் ஒரு படம் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாகரனையும், தமிழர்களையும் இழிவாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
படத்தைப் பிரிண்ட் போட சென்னைக்கு பெரீஸ் வந்திருந்தபோது தமிழ் ஆர்வலர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு பெரீஸைத் தாக்கினர். படச் சுருளையும் பறிமுதல் செய்தனர். இதனால் பெரீஸ் வெறும் கையுடன் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கொழும்பு படநிறுவனம் ஒன்று பிரபாகரன் பெயரில் சிங்கள படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பாதிக்கும் வகையிலும் உள்ளது.
சிங்களர்களை தமிழ் மக்கள் அடக்கி வைத்திருப்பதுபோலவும், இதனால் சிங்களத்தினர் அகதிகள் போல வாழ்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில், இலங்கையில் தமிழர்கள் தான் ஒடுக்கப்பட்டு, உரிமை பறிக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், இலங்கை தமிழர்கள் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை நடக்கிறது. செஞ்சோலையில் சிங்கள விமானப்படை குண்டு வீசியதில் 60 இளம் மாணவிகள் மரணம் அடைந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் சிறுவர்களை ராணுவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், குண்டு வீச்சில் மரணம் அடைந்த அந்த இளம் விடுதலைப்புலிகளுக்கு பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிக்குழந்தைகள் பலியானது போல விடுதலைப்புலி இயக்கம் நாடகமாடி வருகிறது என்று இப்படத்தில் தவறாக காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் அனைத்தும் முழுக்க, முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்களுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தமிழிலும், மற்ற இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்வதற்காக சென்னை ஜெமினி கலர் லேப்பிற்கு கொண்டு வந்துள்ளனர். நம் நாட்டில் இந்த படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. ஆகவே, உள்துறை செயலாளர் இந்த படச்சுருள்களை முடக்கி வைக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இருப்பதால் இந்த படத்தை அழித்துவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications