ஓகனேக்கல்: 'புள்ளி வைக்க வேண்டும்'- விஜயகாந்த்
சென்னை: அணுசக்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை இடதுசாரிகள் நடுநடுங்க வைப்பது போல கர்நாடகத்தை நடுங்க வைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பெங்களூரில் கன்னட அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைகள் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன் மீது பங்கேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், இந்த திட்டம் குறித்தும், கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் இங்கே பேசியவர்கள் விளக்கமாக சொன்னார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு மற்றவர்களை காரணமாக கூறுவதற்கு முன்பு, நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.
ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். நமக்கு ஆடியும், பாடியும் கறக்கத் தெரியும்.
நாம் பயந்து கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நாம் முன்னெச்சரிக்கையோடு அமைதி காக்கிறோம்.
புள்ளி வைக்க வேண்டும்:
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி ஒரு புள்ளியை வைக்கும் போது காங்கிரஸ் கட்சி பயந்து நடுங்குகிறதோ, அதே போன்ற ஒரு 'புள்ளியை' இந்த பிரச்சனையில் தமிழக அரசும் வைக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றார் விஜயகாந்த்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications