பிரணாப் முகர்ஜியிடம் இந்திய தூதர் மீது பகீர் புகார்
டெல்லி: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய 'சாத்தானின் வேதங்கள்' உள்ளிட்ட நூல்களை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதரின் வெப்சைட்டில் விற்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
டெல்லியில் வருடாந்திர ஹஜ் மாநாட்டை வெளியுறவுத்துறை பிரணாப் முகர்ஜி இன்று துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் பிரணாப் உரையாற்றி முடிந்ததும் திடீரென்று முன்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் கையில் வைத்திருந்த இந்தி செய்தித்தாளை தூக்கி காட்டினார்.
அதில், சவுதிக்கான இந்திய தலைமை தூதர் அவுஸப் சய்யீத்துக்கு சொந்தமான இணையதளத்தில் சர்ச்சைக்குரிய சாத்தானின் வேதங்கள் உள்பட எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நூல்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கு அமைச்சர் பிரணாப் விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்த நபர் கோரினார்.
இந்த சம்பவம் நடந்தபோது அங்கு தூதர் அவுஸப் சய்யீத்தும் இருந்ததால் நிலைமை தர்மசங்கடமானது. இந்த நிலையில் சய்யீத் முன்வந்து விளக்கம் அளித்தார்.
அப்போது சய்யீத் "இந்த செய்தி முழுக்க முழுக்க தவறு. அதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. ஹஜ் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள என் மீது அபாண்ட பழியை சுமத்தும் நோக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நான் சொல்லும் உண்மையை எனது வெப்சைட்டில் சென்று தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
இலவச சர்வரில் உள்ள அந்த வெப்சைட்டில் என்னை மீறிய செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியுடனோ அவரது சாத்தானுடனோ எனக்கு துளியும் தொடர்பில்லை" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications