மாணவிகளை ஆடச் சொல்லி ரகளை - தலைமை ஆசிரியருக்கு அடி
நெல்லை: பாளையங்கோட்டை அருகே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தும், டான்ஸ் ஆடச் சொல்லி ரகளை செய்தும், மது அருந்த ஊறுகாய் கேட்டு கொடுமைப்படுத்தியும் வந்த பள்ளி தலைமை ஆசிரியரை பொதுமக்கள் நையப்புடைத்தனர்.
பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தில் டிடிடிஏ துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாஞ்சான்குளத்தை சேர்ந்த சாமுவேல் ஞானதுரை என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அடிக்கடி குடித்து விட்டு பள்ளிக்கு வருகிறார், போதையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்கிறார் என்று கூறி ஊர் தலைவர் அய்யாத்துரையிடம் சில மாணவிகளின் பெற்றோர் முறையிட்டனர்.
இந்த நிலையில் சிலர் சாமுவேலை தேடிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதையடுத்து ஊர் தலைவர் சார்பில் சீவலப்பேரி போலீசில் தலைமையாசிரியர் மீது புகார் தரப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதா பள்ளிக்கு வந்து ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார். கல்வி துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், தான் மது அருந்தும்போது சில மாணவிகளை கடைகளுக்கு அனுப்பி கூல்டிரிக்ஸ், கூறுகாய் வாங்கி வரச் செல்வது தலைமையாசிரியரின் வழக்கமாம்.
கடந்த 28ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு சில மாணவிகளை மட்டும் தலைமை ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்களை தனது அறைக்கு அழைத்து சென்று டான்ஸ் ஆட சொல்லியிருக்கிறார். மேலும் டிரஸ் அணியாமல் நடனமாடும்படியும் அந்த மாணவிகளிடம் அசிங்கமாக நடந்திருக்கிறார். குடிபோதையில் சில மாணவிகளிடம் எல்லை மீறியும் சில்மிஷம் செய்திருக்கிறார்.
மாணவிகள் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் விசாரித்தோம். அப்போதுதான் எங்களுக்கு விவரம் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் பள்ளிக்கு சென்று அவரை அடித்து உதைத்தோம். தலைமையாசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆட்சித் தலைவரிடம் அறிக்கை தரவுள்ளனர். அதன் பேரில் சாமுவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications