3 நிமிடம், 2 மனைவி, ஒரே டைவர்ஸ்!
கோலாலம்பூர்: மலேசியாவில் 3 நிமிடங்களில் தனது இரு மனைவியர்களை விவாகரத்து செய்து மலேசிய வர்த்தகர் ஒருவர் 'சாதனை' படைத்துள்ளார்.
தெரங்கனு மாகாணத்தில் உள்ள கோர்ட்டில்தான் இந்த அதிவேக விவாகரத்து நடந்துள்ளது.
விவாகரத்து செய்தவரின் பெயர் ரோஸ்லான் நகா (44). இவரால் விவாகரத்து செய்யப்பட்ட இரு பெண்களின் பெயர்கள் நோர்ஹயாதி இஸ்மாயில் (46), மஸ்துரா அகமது (35). இருவருக்கும் அடுத்தடுத்து மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்தை முடித்துக் கொண்டார் ரோஸ்லான்.
ரோல்லானை விவாகரத்து செய்ய விரும்பிய அவரது மனைவியர் இருவரும் சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து தெரங்கனு இஸ்லாமிய நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து ஒரே நேரத்தில் நடந்தது.
தங்களுக்கு குடும்பம் நடத்த பணம் தருவதில்லை, கணவராக இருந்து செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில்லை. பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இரு மனைவியரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக சொல்ல மட்டுமே செய்யலாம். ஆனால் விவாகரத்து கொடுக்க வேண்டியது அவருடைய கணவர்தான். அல்லது கோர்ட் விவாகரத்து குறித்து தீர்மானிக்க முடியும். அப்படியும் கூட கணவர் தலாக் சொன்னால்தான் விவாகரத்து வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோல்ஸான்-நோர்ஹயாதி தம்பதிக்கு 1986ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
1992ம் ஆண்டு மஸ்துராவைத் திருமணம் செய்தார் ரோஸ்லான். இவர் ஒரு நர்ஸ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2001ம் ஆண்டு 3வது கல்யாணமும் செய்து கொண்டார் ரோஸ்லான். ஆனால் விரைவிலேயே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார்.
விவாகரத்து குறித்து ரோஸ்லான் பின்னர் கூறுகையில், எனது மனைவியர் இருவரும் நல்ல தோழிகள் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஒரே நேரத்தில், அதுவும் கூட்டாக விவாகரத்து கோருவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications