காரத்துக்கு கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மார்க்சிஸ சித்தாந்தம் குறித்து நன்கு அறிந்த, உழைக்கும் மக்களின் உயர்வுக்காக ஓய்வின்றி உழைத்து வருகிற தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து அறிந்து மகிழ்ந்தேன்.
இதேபோல கட்சியின் பல்வேறு குழுக்களுக்கு தேர்வாகியுள்ள பிற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications