பெரியகுளம் அருகே விஷ்ணுவர்த்தன் பண்ணை சூறை

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனுக்குச் சொந்தமான பண்ணை இல்லத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கிராமத்தினர் தாக்கி சூறையாடினர்.

கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விஷ்ணுவர்த்தன். இவர் ரஜினியுடன் விடுதலை உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ரெங்கநாதபுரம் என்ற இடத்தில் பிரமாண்டமான பண்ணை உள்ளது.

ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்துள்ள இந்த பண்ணையைச் சுற்றிலும் வேலி போட்டு வைத்துள்ளனர்.

நேற்று இந்தப் பண்ணைக்கு திமுக இளைஞர் அணியினர், அதிமுகவினர், கிராம மக்கள், தமிழ் இலக்கிய பேரவை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கம்புகளுடன் திரண்டு வந்தனர். பண்ணை நுழைவாயில் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். சில மின்சார சாதனங்களும் இதில் தப்பவில்லை. பண்ணையில் பெரிய அளவில் வேறு எந்தப் பொருளும் இல்லாததால், இருந்த பொருட்களையும் அடித்து உடைத்த பின்னர் விஷ்ணுவர்த்தனின் கொடும்பாவியை தீவைத்துக் கொளுத்தி கர்நாடக வன்முறையைக் கண்டித்து கோஷமிட்டனர்.

அதன் பின்னர் வந்து சேர்ந்த போலீஸார் அனைவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+