ஓகேனக்கல்: ஏப்.8ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு
சென்னை: கர்நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி (செவ்வாய்கிழமை) முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த பேரவையின் தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் கர்நாடகம் பிரச்சினை செய்வது நியாயம் அல்ல. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்தவும், கர்நாடகத்தின் அராஜகத்தை கண்டித்தும் வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் முழு கடை அடைப்பு செய்கிறார்கள். ஓட்டல், டீக்கடை உள்பட அனைத்தும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அன்றைய தினத்தி்ல வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் உள்ள கன்னடர்களின் கடைகள் தாக்கப்படுவது விரும்பத்தகாத செயல் ஆகும். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பாமக ஆர்ப்பாட்டம்:
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பெரும் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications