அமைச்சர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி
டெல்லி: ராகுல் காந்தியை தான் அமைச்சராக்க நினைத்ததாகவும், ஆனால் அவர் அதை மறுத்து விட்டார் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நேற்று மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டது. இதில் ராகுல்காந்தியின் ஆதரவு பெற்ற இருவருக்கு (சிந்தியா, ஜிதீன் பிரசாதா) ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆனால் ராகுல் காந்தியையே அமைச்சராக்க சோனியா காந்தி நினைத்துள்ளார். அவர்தான் மறுத்து விட்டாராம்.
இத்தகவலை சோனியா காந்தியே வெளிப்படுத்தியுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சோனியா பேசுகையில், ராகுல் காந்தியை அமைச்சராக்க தீர்மானித்தேன். அவரிடமும் கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை தீவிரமாக கவனிக்க விரும்புவதாக ராகுல் காந்தி கூறினார். அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தனது கவனம் சிதறும் என்று அவர் கருதினார். பின்னர் தனது பொறுப்பை சரிவர கவனிக்க முடியாது என்றும் கருதினார். எனவேதான் அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.
நிறைய இளம் எம்.பிக்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், கூட்டணி கட்டாயங்கள் அதற்கு இடம் கொடுக்காது.
பண வீக்க விகிதம் உயர்ந்து வருவது கவலை தருகிறது. இது தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நிலமை சகஜமாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் அரசு முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றார் சோனியா.
பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ராகுல் காந்தி கட்சியில் முக்கியத் தலைவர். எனவே அவருடன் முக்கிய விஷயங்களில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திலும் அவரது ஆலோசனை கேட்கப்பட்டது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இது எப்போது முடியும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார் பிரதமர்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications