போலீசுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பலாம்-டிஜிபி
மதுரை: போலீசாருக்கு பொது மக்கள் தங்கள் புகாரை இ-மெயிலில் அனுப்பலாம் என தமிழக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழக போலீசாருக்கான வெப்சைட் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.
எல்லா கமிஷ்னர் அலுவலகங்களிலும் இ-கவர்னன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் படிப்படியாக இந்த வசதி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த வசதி மூலம் பொது மக்கள் தங்களது குறைகளையும், புகார்களையும் காவல் துறைக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.
இந்த புகார் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். தென் மாவட்ட மலைப் பகுதியிகளில் தற்போது நக்சலைட்கள் நடமாட்டம் இல்லை.
தமிழ போலீசில் தேவையான அளவு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளனர். இது தவிர அனைத்து போலீசாருக்கும் சிறப்பு அதிரடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஓகேனக்கல் பிரச்சனையில் ஒசூர் பஸ் எரிப்பு சம்பவம் வேதனை தருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications