தர்மபுரியில் 10ம் தேதி விஜய்காந்த் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓகேனக்கல் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வரும் 10ம் தேதி தர்மபுரியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து 10ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடை பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரனும், திருச்சியில் கு.ப.கிருஷ்ணனும், நெல்லையில் ஆஸ்டினும், வேலூரில் சுதீசும் போராட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள்.
மற்ற மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications