தப்பு பண்ணிட்டேன்: பதவி போனதால் தாசரி வருத்தம்
ஹைதராபாத்: பேசாமல் சினிமாவிலேயே இருந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசியலுக்குப் போனது நான் செய்த பெரிய தவறு என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை இழந்த தாசரி நாராயண ராவ் கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவ். காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்தியில் இணை அமைச்சராகவும் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இவரது பதவியை காங்கிரஸ் மேலிடம் காலி செய்தது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹைதராபாத் திரும்பியுள்ள தாசரி, தான் அரசியலில் நுழைந்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என்று புலம்பியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதியில், இயக்குநர் கே.பாலச்சந்தருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசுகையில்தான் இப்படி வருத்தப்பட்டார் தாசரி.
தாசரி பேசுகையில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தபின், பெரிய அளவில் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலில் நுழைந்து நான் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்.
இனி நான் மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன். தென்னிந்திய திரைப்படத் துறையினரை வட மாநில திரைத் துறையினர் அவமரியாதையுடன் நடத்துகின்றனர்.
தென்னிந்திய திரைத் துறையில் புகழ் பெற்ற திறமைசாலிகள் நல்ல வெற்றி படங்களை அளித்துள்ளனர். திறமையான இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் திரைப்படத் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் பலர் இருந்தும் என்ன காரணத்தாலோ தென்னிந்திய திரைப்படத்துறைக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பது அரிதாக உள்ளது.
எனக்குப் பதவின போனது குறித்து கவலை இல்லை. பதவி என்றால் அது வரும், போகும். ஆனால் சினிமாத் துறையினர் எப்போதும் மாஜி ஆக மாட்டார்கள் என்றார் தாசரி.
கவர்ச்சி நடிகை முமைத்கான் படு கவர்ச்சியாக தெலுங்கில் நடித்து தமிழுக்கு டப் ஆகியுள்ள காயத்ரி ஐபிஎஸ் படத்திற்கு தாசரிதான் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அவரது மனைவி தாசரி பத்மாதான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications