பெயின்டர் நாக்கை வெட்டிய பெண் கைது
சேலம்: மாந்திரீகம் செய்வதற்காக பெயின்டரின் நாக்கை வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40), பெயின்டராக இருக்கிறார். இவரது மனைவி சந்திரா.
இரும்பாலை காவல் நிலையத்தில் சந்திரா ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எங்கள் வீட்டுக்கு அருகே குடியிருப்பவர் ராஜம்மாள். கடந்த 4ம் தேதி எனது கணவர் வெங்கடாசலம் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்னி அறைத்துக் கொண்டிருந்த ராஜம்மாள், அதை சுவைத்துப் பார்க்கும்படி கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் திடீரென்று அவர் மீது மயக்கப் பொடியைத் தூவி அவரது நாக்கை வெட்டி துண்டாக்கினார். ரத்தத்தை மந்திர தகட்டில் தடவி பூஜை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்த நிலையில் வலி தாங்காமல் எனது கணவர் அலறித் துடித்தார். மாந்திரீகம் செய்வதற்காக எனது கணவரின் நாக்கை வெட்டிய ராஜம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், வெங்கடாசலம் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை தள்ளி விட்டபோது சுவற்றில் மோதி நாக்கு அறுபட்டதாகவும் ராஜம்மாள் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications