தமிழ் நாடக நடிகர் சிட்னியில் மர்ம மரணம்
மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது.
இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான நிலையம் வந்தனர்.
ஆனால் அப்போது பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால் விமானத்தில் பயணிக்க அவரை மட்டும் அனுமதிக்க மறுத்தனர் விமான நிலைய ஊழியர்கள். இதையடுத்து மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பினார் பிரகாஷ்.
இந்த நிலையில் மார்ச் 25ம் தேதி ஹோட்டலில் பிணமாக கிடந்தார் பிரகாஷ். அதிக அளவில் மது அருந்தி வாந்தி எடுத்து அதன் மீது அவர் விழுந்து கிடந்தார்.
ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் அல்ல என்று அவருடன் நடித்த சக கலைஞர் பயீஸா ஜலாலி கூறியுள்ளார். இதுகுறித்து ஜலாலி கூறுகையில், பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. அவர் அதிகம் குடிப்பவர் இல்லை. இருந்தாலும், ஓய்வே இல்லாமல் நடித்ததால் ஏற்பட்ட சோர்வில் அன்று அதிகம் குடித்திருக்கக் கூடும்.
இந்திய நாடக நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் பிரகாஷ். தற்காப்புக் கலைகள் மீது அதிக நேசம் கொண்டவர். நல்ல இசையமைப்பாளரும் கூட. சிறந்த நடிகராக விளங்கினார் பிரகாஷ் என்றார்.
பிரகாஷின் உடல் தற்போது சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications