ஓகேனக்கல் திட்டம் நிறுத்தம்: கருணாநிதியின் முடிவு - மொய்லி
பெங்களூர்: சோனியா கேட்டுக் கொண்டதால் தான் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை கருணாநிதி நிறுத்தி வைத்துள்ளார் என்று நேற்று கூறிய கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, இன்று பல்டி அடித்துள்ளார். கருணாநிதியாகத்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இதையடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பொறுத்திருப்போம், அதுவரை திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்போம் என்று அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
இந் நிலையில் முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, அனுமதி வழங்கியது யார் என்பது பற்றி இப்போது விவாதிக்க தயாராக இல்லை. இந்த பிரச்னையில் இரு மாநிலங்களில் நிலவிய பிரச்னை தணிந்துள்ளது.
இத்திட்டத்தை ஒத்தி வைத்த முதல்வர் கருணாநிதியின் முடிவை வரவேற்கிறேன்.
இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தலையிட்டுள்ளார். கருணாநிதியுடன் சோனியா போனில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் இத்திட்டத்தை கருணாநிதி ஒத்தி வைக்க சம்மதித்தார். இதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் மீது தான் வைத்துள்ள அதீத அக்கறையை இதன் மூலம் சோனியா நிரூபித்துள்ளார் என்று கூறியிருந்தார்.
பல்டி அறிக்கை:
இந் நிலையில் தனது நிலையிலிருந்து பல்டி அடித்து புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் மொய்லி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் தவறான கண்ணோட்டத்தில் செய்திகளில் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தி முதல்வர் கருணாநிதியுடன் பேசிய பின்னரே கருணாநிதி திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையில், இரு மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும். பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். இரு மாநிலத்திற்கும் இடையே சுமூக நிலை நீடிக்க வேண்டும் என்பதுதான் சோனியா காந்தியின் விருப்பமும், கவலையும்.
தமிழகத்தின் தரப்பில் முதல்வர் கருணாநிதி இரு மாநில அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை, கர்நாடக மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications