நிலம் மீட்பு-சட்டசபையில் அதிமுக அமளி
சென்னை: மதுராந்தகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகாத்த ராமர் கோவிலின் நிலம் மீட்கப்பட்டது தொடர்பாக சட்டசபையில் திமுக-அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி தேவி, மதுராந்தகம் ஏரி காத்தராமர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்ததா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நீதிமன்றத்தின் மூலம் மதுராந்தகம் பகுதியில் 20 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டதாகவும், அது (அதிமுகவைச் சேர்ந்த ஒருவரைக் குறிப்பிட்டு) அவரிடம் இருந்து மீட்கப்பட்டது என்றும் பதில் தந்தார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நிலத்தை வைத்திருந்தவரின் பெயரை குறிப்பிடக் கூடாது, அவர் சார்ந்த கட்சியின் பெயரையும் கூறக் கூடாது. கேள்வி நேரத்தின்போது யார் மீதும் குற்றச்சாட்டு கூறக் கூடாது என்றனர்.
மேலும் அதிமுக எம்எல்ஏக்களும் கூண்டோடு எழுந்து நின்று அமைச்சர் குறிப்பிட்ட நபரின் பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
பதிலுக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் சட்டசபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர்கள் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் எழுந்து குறிப்பிட்ட நபரின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், உறுப்பினர் கேட்ட கேள்விக்குத்தான் நான் பதில் சொன்னேன். யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை. இதில் தவறும் எதுவும் இல்லை என்றார்.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் தலையிட்டு, அமைச்சர் குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!












Click it and Unblock the Notifications