• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

27% இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக சட்டசபையில் உற்சாக வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு தமிழக சட்டசபையில் இன்று பெரும் மகிழ்ச்சி கலந்த வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

சட்டசபையில் கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் மேசைளைத் தட்டி வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி எழுந்து பேசுகையில், இது தமிழக அரசுக்கும், பாமகவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றார். இதையடுத்து மீண்டும் உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X