கோலாலம்பூர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு-6 பேர் காயம்

பரபரப்பான கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் விமான நிலையம் அல்லோகல்லப்பட்டுப் போனது.
இன்று காலை அந்நியச் செலாவணி மாற்று நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 2 பேர் ஒரு பை நிறைய பணத்துடன் (10 லட்சம் அமெரிக்க டாலர்) கோலாலம்பூர் விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வந்தனர்.
அப்போது 6 கொள்ளையர்கள் ஒரு பிஎம்டபிள்யூ காரில் அங்கு மின்னல் வேகத்தில் வந்திறங்கினர். காரிலிருந்து இறங்கிய கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த தானியங்கி பிஸ்டல் மூலம் பணம் கொண்டு சென்றவர்களின் கால்களில் சுட்டனர். உடன் வந்த காவலர்களையும் அவர்கள் சுட்டனர்.
இதனால் காயமடைந்த நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பணப் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அப்போது வழியில் நின்றிருந்த நேபாள நாட்டுத் தொழிலாளர் உள்பட மேலும் இரண்டு பேரையும் சுட்டு விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
மூன்றே நிமிடத்தில் இந்த துணிகர கொள்ளை நடந்து முடிந்தது. கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு பெண்மணி உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் பண நிறுவன ஊழியர்களும், காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் 40 தோட்டாக்கள் சிதறிக் கிடந்ததை காவலர்கள் கண்டுபிடித்தனர். ஐந்து கண்ணாடி ஜன்னல்கள் இந்த சம்பவத்தில் சிதறி விட்டன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications