தொழில் வள சாலையாகும் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை
சென்னை: சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துமாறு முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய நேர்முகக் கடிதத்தில் டெல்லியிலிருந்து மும்பை வரை செல்லும் நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக உருவாக்கிட மத்திய அரசு அறிவித்துள்ளது போல்,
சென்னை- பெங்களூர் இடையிலான நெடுஞ்சாலையையும் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவித்து அதை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவிப்பதன் மூலம் இந்த நெடுஞ்சாலை முழுவதிலும் உலகத் தரத்திற்கு இணையான கட்டமைப்பு வசதிகள் உருவாக வழி வகுக்கும்.
அத்துடன், இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி தொடர்ந்து நிலைபெறவும், மேலும் மேம்படவும் உதவும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் தமிழக அரசுக்கு கடந்த 1ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை ஒரு தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளதாகவும், இத்திட்டம் மும்பை வரை நீட்டிக்கப்படுமாயின் மேலும் பயன்தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை- பெங்களூர்- மும்பை தொழில் வள நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு ஒரு கொள்கை அறிக்கையைத் தயாரிக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு











Click it and Unblock the Notifications