அர்ஜூன் சிங்குக்கு கருணாநிதி நன்றி கடிதம்!

அர்ஜூன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை மிக வேகமாக பரப்பி வந்தன. ஆனாலும் தனது நிலையில் திடமாக இருந்தார் சிங்.
இப்போது இட ஒதுக்கீட்டு்க்கு உச்ச நீதிமன்ற அனுமதி கிடைத்துவிட்ட நிலையில் அவருக்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் மன்மோகன் சிங் தலைமையில் நடந்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது, சமூக நீதிக்காக பாடுபடும் தலைவர்களும், சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது. இது உண்மையிலே நமது மாபெரும் நாட்டில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.
18 ஆண்டுக்கு முன்பு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு முதலில் இட ஒதுக்கீடு நடவடிக்கையை எடுத்தது. தற்போது 2வது முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு உரிமையை பெற நாம் நூற்றாண்டுகளாக போராடி வந்தோம். தற்போது கிடைத்துள்ள வெற்றி மறக்க முடியாத வரலாற்று சாதனையாகும்.
கிரீமி லேயர் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நீங்கள் தெளிவான முடிவு எடுத்துள்ளீர்கள். எனவே கிரீமி லேயர் பிரச்சினையையும் நீங்கள் வெற்றிகரமாக தீர்த்து வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து வலியுறுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
தமிழக மக்களின் கனவு நிறைவேறி இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற நீங்கள் எடுத்த முயற்சிகள், உறுதியான நடவடிக்கைகளுக்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை:
முன்னதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அளித்த தீர்ப்பை மாற்றிட சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 2007ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி சட்டப்பேரவையில் அரசின் சார்பில் நான் முன்மொழிந்த தீர்மானம்,
இன்றைக்குத் தடை கடந்து, பீடு நடை போட்டு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றி வைத்துள்ள ஒளி விளக்காகப் பிரகாசிப்பது கண்டு, என் ரத்தத்துடன் கலந்து ஊறிய சமூக நீதிக் கொள்கைக்குக் கிடைத்த இணையற்ற வெற்றியென்று கருதுகிறேன்.
"கிரீமி லேயர்'' பிரச்சினை குறித்து மத்திய மந்திரி அர்ஜுன்சிங் கூறியுள்ளதும் ஆறுதல் அளித்திடக் கூடியதாகும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications