கொலை-31 ஆண்டுக்கு பின் இருவருக்கு தண்டனை
கோவை: சமபந்தி விருந்தில் தலித் மாணவரை அடித்து கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து 2 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர் தண்டபாணி. கடந்த 1977ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் தண்டபாணியும் அவரது நண்பர்களும் சென்று சாப்பிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சில உயர்ஜாதியினர் தண்டபாணியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தண்டபாணி சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், தண்டபாணியை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ், நீலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.7000 அபராதமும் விதிக்கப்பட்டது. கார்த்திக், சம்பத் ஆகியோருக்கு தலா 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர், கொலை நடந்தபோது சிறுவர்களாக இருந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஒரு கொலை வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications