சீனாவைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
வாஷிங்டன்: திபெத் போராட்டத்தை அடக்குமுறையால் அடக்க முயலும் சீன அரசைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் நான்சி பலோசி கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 413 பேரும், எதிர்த்து ஒருவரும் வாக்களித்தனர்.
தீர்மானத்தைக் கொண்டு வந்து பலோசி பேசுகையில், சீன சட்ட திட்டங்களை எதிர்த்தும், சீன அரசின் கொள்கைகளை எதிர்த்தும் திபெத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
சீன அரசின் கொள்கைகளும், சட்டங்களும், தங்களது மொழி, கலாச்சாரம், மத அடையாளம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக திபெத்தியர்கள் கருதுகிறார்கள், கவலைப்படுகிறார்கள்.
ஆனால் இதை சீன அரசு கவனத்தில் கொள்ள மறுக்கிறது. இதை விட மோசமாக, ஒலிம்பிக் ஜோதியை திபெத் வழியாக கொண்டு செல்லவும் அது முயலுகிறது. இதை உலக சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
திபெத்தியர்களின் போராட்டத்ைத வன்முறையால் அடக்க முயலுவதை சீன அரசு நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல செனட் சபையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் எதிர்காலத்தில் அமெரிக்காவில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களைத் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது தூதரக அலுவலகத்ைதத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறுகையில், திபெத்தில் அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை தொடங்க விரும்புகிறது. இதன் மூலம் திபெத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
திபெத்தில் துணைத் தூதரகத்தை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications