சித்திரை திருநாள்: கோவில்களில் வழிபாடு வழக்கமான உற்சாகம் குறைவு
சென்னை: சித்திரை திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் இன்று தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததால், கோவில்களில் வழக்கமாக புத்தாண்டுக்கு செய்யப்படும் பூஜைகள் செய்யப்படவில்லை.
சித்திரை முதல் நாள்தான் இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.
இதையடுத்து இன்று தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவில்லை. மாறாக சித்திரைத் திருநாளாக தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடினர்.
சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இருப்பினும் வழக்கமாக புத்தாண்டுக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை. பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல இல்லை. இருப்பினும் பலர் தமிழ்ப் புத்தாண்டாகவே நினைத்து இன்று கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டதைக் காண முடிந்தது.
பாஜக நூதனப் போராட்டம்
மதுரையில், பாஜகவினர் தல்லாகுளம், தமுக்கம் மைதானம் எதிரே உள்ள தமிழன்னை சிலை முன்பு கூடி, சிலைக்கு மாலை அணிவித்து பஞ்சாங்கம் படித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்ப் புத்தாண்டை தமிழக அரசு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications