நேபாளத்தில் மாவோயிஸ்ட் ஆட்சி மலருகிறது

நேபாள நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.
மொத்தம் 601 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 43 இடங்களில் 27 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவுக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து திட்டமிட்டபடி கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும், ஜனநாயகம் மலரும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பல்வேறு கட்சிகளுன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றுவோம். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
நேபாளம் ஜனநாயக, பெடரல் குடியரசு நாடாக அறிவிக்கப்படும். நாட்டில் சோசலிஷத்தை நிலைநிறுத்த பாடுபடுவோம்.
அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுக்கிறேன்.
நேபாளத்தை வளம் மிக்க, பலம் மிக்க நாடாக மாற்றும் பொறுப்பு எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. அதிலிருந்து நாங்கள் தவற மாட்டோம் என்றார் பிரசந்தா.
மன்னராட்சிக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்ட்டுகள், கடந்த 2006ம் ஆண்டு ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கட்சி 6 இடங்களிலும், நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி 2 இடங்களிலும், மாதேசி மக்கள் உரிமைக் கழகம் கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்தது.
மாவோயிஸ்ட் வேட்பாளர்கள் மேலும் 48 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர்.
பிரசந்தா வெற்றி
இதற்கிடையே, மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா, காத்மாண்டு 10வது தொகுதியில், வெற்றி பெற்றார். அவருக்கு 20 ஆயிரத்து 499 ஓட்டுக்களும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் வேட்பாளருக்கு 11 ஆயிரத்து 103 ஓட்டுக்களும் கிடைத்தன. 9396 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசந்தா வெற்றி பெற்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications