சோனியா அல்லது ராகுல் பிரதமராக பவார் ஆதரவு
டெல்லி: 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சோனியா அல்லது ராகுல் காந்தியைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவரான சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனதை எதிர்த்து தான் காங்கிரஸை விட்டு வெளியேறினார் சரத் பவார். தேசியவாத கட்சியை ஆரம்பித்த அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவு தெரிவித்தார்.
இந் நிலையில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தெரிவிப்பதாக பவார் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி. அவர்களுடன் எங்களது கட்சியையோ அல்லது திமுக, ஆர்.ஜே.டி. என எந்தக் கூட்டணிக் கட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
நாளையே சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ பிரதமர் பதவிக்கு நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்தால் அதை தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்காது.
யார் பிரதமர் என்பதில் பிரச்சினை எதுவும் இல்லை. இதுகுறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றார் படேல்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications