டெல்டா பாசனம்-ஜூன் 12ல் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூ்ர் அணை திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 12ம் தேதி திறந்துவிடப்படவுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால், கர்நாடகம் தண்ணீர் தராமல் இழுத்தடிப்பு செய்வது வழக்கமாகிவிட்டதால் கடந்த பல ஆண்டுகளாகவே குறிப்பிட்ட நாளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது என்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
ஆனால், அவ்வப்போது இயற்கை கருணை காட்டி அணையை நிரப்பிவிடுவதும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் பருவம் தவறி பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து திருப்திகரமாகவே இருந்தது.
அணையின் நீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளதால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் (ஜூன் 12) தண்ணீரை திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளது.
அணையின் நீர் மட்டம் குறித்து பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் நாகராஜனும் ஆய்வு செய்தார்.
இன்று காலை 8 மணியளவில் அணையின் நீர் மட்டம் 97.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்ந்தது.
அணையிலிருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications