'அப்படி நடக்க வாய்ப்பில்ல.. ஒருவேளை நடந்தா?'
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க வாய்ப்பில்லை. அப்படி நீக்கினால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் அக் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
அவரது பேட்டி:
கேள்வி: மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?
பதில்: கட்சி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதை காங்கிரசார் அனைவரும் நிச்சயம் ஏற்பார்கள்.
கேள்வி: மாவட்டத் தலைவர்கள் மாற்றத்துக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: அடுத்து வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிலும் மாற்றம் வரும். கட்சி தலைவர் சோனியா காந்தியின் ஆலோசனைப்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கேள்வி: அடுத்த கட்டமாக மாநில தலைவர்களும் மாற்றப்படுவார்கள் என்று மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார் கூறியிருக்கிறாரே?
பதில்: மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தான் கூறியிருக்கிறார்.
கேள்வி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டால்?
பதில்: அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
கேள்வி: ஒருவேளை நடந்தால்?
பதில்: காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி எடுக்கும் முடிவை ஏற்பேன் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications