போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்-அதிமுக வெளிநடப்பு
சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றினர். முதல்வர் பேசும்போது அவரைப் பேச விடாமல் தடுக்க முயன்றதாக அரி, வி.பி.கலைராஜன் ஆகியோர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் சட்டசபையில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை அதிமுக எழுப்பியது. கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் அதற்கு அனுமதி மறுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்றே முதல்வர் பதிலளித்து விட்டார். விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை விசாரணைக் குழுவிடம் அதிமுகவினர் அளிக்கலாம் என்றார்.
இதையடுத்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி செங்கோட்டையன் வெளியேறினார். இதையடுத்து பிற அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications