உ.பி இடைத் தேர்தல்-மாயாவதி அபாரம்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை மற்றும் மக்களவை இடைத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) வெற்றி பெற்றுள்ளது.
உ.பி. மாநிலத்தில் முராத்நகர், பில்கிராம், கர்னல்கஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும், அசாம்கர் மற்றும் காலிலாபாத் லோக்சபா தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது.
இதனால் உ.பி. மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கும், பாஜக, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை பொதுத்தேர்தல் முடிந்து 11 மாதங்களுக்குள் நடந்த இந்த இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின்மூலம் தனது மக்கள் ஆதரவை முதல்வர் மாயாவதி உறுதி செய்துள்ளார்.
இடைத்தேர்தலில் பொதுவாக வீசும் ஆளும்கட்சிக்கு எதிரான அலை பிஎஸ்பியை பாதிக்கும் என்று பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்டிய மனக்கோட்டையும் இதன்மூலம் தகர்ந்தது.
சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கி நிறைந்த அசாம்கர் மற்றும் காலிலாபாத் தொகுதிகளையும் வென்றுள்ளதால் மாயாவதியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தெரிகிறது.
இந்த நிலையில் லோக்சபா பொதுத்தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கையில் உ.பி.யில் மாயாவதியின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை பாஜக, காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications