மக்களைக் கவர சந்திரபாபு நாயுடு யாத்திரை
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 21ம் தேதி முதல் சைதன்ய யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார்.
ஹைதராபாத்தில் இதுகுறித்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை மக்களிடம் விளக்கும் வகையில் சைதன்ய யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு முதல் கட்டமாக யாத்திரை மேற்கொள்ளப்படும். சித்தூர் மாவட்டம் திருப்பதியில் யாத்திரை தொடங்கும்.
கட்சித் தலைவர்கள், பெரும் திரளான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்வார்கள். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்காமல் மாநில அரசு எப்படி அவர்களை ஏமாற்றி வருகிறது என்பதை விளக்குவோம்.
அரசின் தவறான போக்கு, மக்கள் விரோத செயல்பாடுகள், கொள்கைளை மக்களிடம் தெளிவுபடுத்துவதே யாத்திரையின் முக்கிய நோக்கம். அரசின் முறைகேடுகளையும் அப்போது மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற ெபயரில் மத்திய, மாநில அரசுகள் பெருமளவு வருவாய் ஈட்டுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்படும் வகையில் அரசுகள் செயல்படுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் இதுவரை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குறைந்தபாடில்லை. ஹைதராபாத் தீவிரவாதிகளின் தலைநகரமாக மாறி வருகிறது. பல குண்டுவெடிப்புகள் இங்கு நடந்துள்ளன. இவை அத்தனையையும் மக்களிடம் தெரிவிப்போம் என்றார் நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் யாத்திரையில், மறைந்த முன்னாள் என்.டி.ஆரி.ன் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு இந்த யாத்திரையை சந்திரபாபு நாயுடு மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications