ரஜினி ரசிகருக்குப் பதவி-தேமுதிகவில் கொந்தளிப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்ட தேமுதிகவில் ரஜினி ரசிகர் ஒருவருக்கு பதவி வழங்கப்பட்டதால் தேமுதிகவினர் கொந்தளிப்படைந்து போராட்டத்தில் குதித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நகர தே.மு.தி.க. செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் ரஜினிகாந்த் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனால் திருவொற்றியூர் பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நமது மன்றத்தைச் சேராத ஒருவருக்கு கட்சிப் பதவியா என்று அவர்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து தே.மு.தி.க. நிர்வாகி ஆர்த்திசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 10க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர்.
கட்சி நிர்வாகிகளை சந்தித்து இது நியாயமா என்று கேட்டனர். ஆரம்பத்திலிருந்தே விஜயகாந்த்துடன் இருக்கும் எங்களை விட்டு விட்டு ரஜினி ரசிகருக்குப் பதவி வழங்குவதா என்றும் ஆவேசமாக கேட்டனர்.
இந்த நிலையில் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சேகரிடம் மேட்டரைத் தெரிவிக்க அவர் தனது ஆதரவாளர்களுடன் கோயம்பேடு கிளம்பினார்.
இரு தரப்பினரும் ஒரே இடத்தில் கூடியதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி பேச்சுவார்த்தையில் இறங்கினர்.
ஆனால் உங்களுடைய விளக்கம் தேவையில்லை, விஜயகாந்த்தைப் பார்த்த பின்னர்தான் நாங்கள் நகருவோம் என்று ஆர்த்தி சேகர் தரப்பு கூறி விட்டது. ஆனால் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் அவரிடம் சொல்வதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சர்ச்சையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications