கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சோதனை விவரம்-தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் உள்ள கட்டடங்கள் குறித்து நேரில் நடத்திய சோதனை குறித்த விவரம் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட், வளாகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி தமிழக அரசு கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட்டுக்குள் அதிரடியாக புகுந்து கட்டடங்களை சோதனையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எஸ்டேட் வழியாக ஊருக்குள் செல்லும் வழியை மறித்து அங்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் கேட் போடப்பட்டது. இதை எதிர்த்தம் கொடநாடு பஞ்சாயத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மற்றும் கொடநாடு தொடர்பான அனைத்து மனுக்களும் நேற்று நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தன. அனைத்துத் தரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்ட பின்னர், கதவுகள் அடைக்கப்பட்டிருந்தது என்றால் வளாகத்துக்குள் எப்படி சென்று ஆய்வு நடத்தினீர்கள்? என்று அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார்.
பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி எஸ்டேட் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், கொடநாடு எஸ்ட்டேட்டிற்குள் நடத்தப்பட்ட சோதனை விவரம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications